கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள காணிகளை அபிவிருத்தியின் பொருட்டு விடுவித்தல் மற்றும் மாவட்டத்தின் நிலவும் ஏனைய காணிப்பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டதுடன் பிரச்சினைகளுக்கான தீர்வுக்குரிய வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டன. அத்துடன் மக்களது காணிகள், விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் போன்றவற்றை குறித்த திணைக்களங்களிடமிருந்து விடுவித்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. மேலும் குறிப்பாக நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் இருக்கின்ற மக்களது காணிகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குடியிருப்பு, பயிர்ச்செய்கைக்கு தேவையான காணிகள், அபிவிருத்திக்கு தேவையான காணிகளை விடுவிப்பதற்குரிய இவ் ஆரம்ப கட்ட கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) பிரதேச செயலாளர்கள், மாவட்ட வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள அலுவலர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 படங்கள்:

பாதுகாப்பான வீதிப்போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான செயலமர்வு இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் பாதுகாப்பான வீதிப்போக்குவரத்து தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் திருவரங்கன் மகேந்திரன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மேலாண்மை மற்றும் தளபாட பொறியியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர், போக்குவரத்து நிபுணர் Dr. டி. சிவகுமார், DR. யூடி ஜெயகுமார், MBBS (இலங்கை), D.PSY (கொழும்பு), FMH (கனடா),போக்குவரத்து நிபுணர் பொறியியலாளர் Dr. திஸ்ஸ யூ லியனகே, ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர், வாகன மேலாண்மைப் பிரிவு, நோர்வே பொது சாலைகள் நிர்வாகம், பெர்கன் நகரம் அலோசியஸ் ஆகியோர் கருத்துரைகளை நிகழ்த்தினர். குறித்த செயலமர்வில் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் முதல்வர்கள்,றோட்டறிக்கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 
படங்கள்:
 
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதநேய அடிப்படையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இராணுவத்தினரும், கிராம சேவையாளர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கண்டாவளை பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் விசுவமடு 553 படைப்பிரிவு மாநாட்டு மண்பத்தில் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன்,அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K அழகக்கோன், 553வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் M.P.J Muthunayaka உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமது மனமார்ந்த நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். அனர்த்த காலங்களில் இவ்வாறான ஒருங்கிணைந்த சேவைகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் மீட்பு நடவடிக்கைகளுக்கும் பெரும் பலமாக அமைகின்றன.
 
படங்கள்:
 
உள்நாட்டு போர்,வன்முறைகள் மற்றும் கலவரம் காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கான "பொது மக்கள் சொத்தழிவு நட்டஈட்டுக்கொடுப்பனவு" மற்றும் போரின் போது கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பொது மக்களுக்கான "கடும்பாதிப்புற்றோர் நிவாரண கொடுப்பனவு" வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலக திறன்விருத்தி நிலையத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக இக் கலந்துரையாடல் நடைபெற்றது. இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராமசேவையாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை குறித்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளாத பொது மக்கள் குறித்த கொடுப்பனவுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
 
படங்கள்: