News & Events
- Details
- Category: News
நிதி நிர்வாகம் மற்றும் 2025 ன் நிதி அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பான முக்கிய விடயங்களும் 2026 ம் நிதியாண்டுக்கான முன்னோடி விடயங்களும் இந்த நிகழ்வில் மிகவும் பயனுள்ளதாக விரிவாக ஆராயப்பட்டன. 2025 ஆம் ஆண்டிற்கான இறுதி நிதி அறிக்கையினை சமர்ப்பிப்பதில் சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் குறித்த நேரத்தில் அறிக்கையை அனுப்புதல், நிதி ஆவணங்களை சிறந்த முறையில் பேணுதல் போன்ற விடயங்களில் வினைத்திறனாக செயற்பட்டமை, செயற்பாட்டில் எதிர்நோக்கிய சவால்கள் குறித்தும் 2025ம் ஆண்டில் நிதிகையாளுகையில் ஒப்பீட்டளவில் சிறப்பான முன்னேற்றத்தினை அடைந்து கொண்டமைக்கு ஒத்துழைத்த விடயங்கள் குறித்தும் 2026 ம் ஆண்டில் உயர்ந்த செயற்பாட்டு பெறுபேற்றினை அடைந்துகொள்ளும் பொருட்டு கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்களில் நிதி முகாமைத்துவத்தில் 98% அடைவுமட்டத்தினை அடைந்து சிறப்பாக மேற்கொண்டமைக்காக உத்தியோகத்தர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார். நடைமுறை மற்றும் மூலதனச் செலவுகள் அனைத்தும் 98% அடைவினை மட்டத்திற்கு கொண்டு செல்லும் முறைமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள கடந்த ஆண்டுகளின் அனுபவங்களை அடிப்படைகளாக கொண்டு ஆலோசிக்கப்பட்டது. இதன்போது 2025ம் ஆண்டிற்கான பராட்டுதல்கள் இடம் பெற்றது. மேலும் 2026ன் நிதி அறிக்கைகள் வெளிப்படைதன்மையுடன், துல்லியமான காரணம்காட்டுதலுடன் கூடியவாறான, உரியகாலத்தில் சமர்பித்தலுக்கான மாதாந்தர கட்டுப்பாட்டு பதிவேடும் வெளியிடப்பட்டது.
மேலும் இந்த 2026ல் ஆண்டிலும் கிடைத்துள்ள ஒதுக்கீடுகளை சிறப்பான முறையில் முழுமையாக பயன்படுத்துவதற்கான அர்ப்பணிப்பான சேவையினை எதிர்பார்ப்பதாகவும் மக்களுக்கான அரச பணியில் தொடர்ந்தும் அனைவரது ஒத்துழைப்பினையும் மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டார்.
கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) பிரதம கணக்காளர், மாவட்ட உள்ளக கணக்காய்வாளர் திட்டமிடற் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச்செயலக பிரதேச செயலகங்களின் கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட செயலக நிதிக் கிளை மற்றும் திணைக்களங்களின் மாவட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
படங்கள்:
- Details
- Category: News
- மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் - குடிசார் (Technical Officer - Civil) தரம் III அல்லது பயிற்சித் தரம்.
- மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் - மின்னியல் (Technical Officer - Electrical) தரம் III அல்லது பயிற்சித் தரம்.
- மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் - படவரைஞர் (Technical Officer - Draughtsman) பயிற்சித் தரம்.
படங்கள்:
- Details
- Category: News
தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் ஏற்பாட்டில் விவசாயிகளின் தானியக்களஞ்சியங்களை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 15 விவசாயிகளுக்கு ரூபா 45000 பெறுமதியான காசோலை வழங்கும் நிகழ்வு கனகாம்பிகைக்குளம் நெல் களஞ்சிய சாலை அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் மாவட்ட உத்தியோகத்தர் என்.சோமகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ரோகித பிரசாந்த கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலையை வழங்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன், தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
படங்கள்:
- Details
- Category: News
சிங்கப்பூரைச் சேர்ந்த திரு.திருமதி ரி.ரி.துரை குடும்பத்தினர் மற்றும் செல்வி சரசீஜா ராமன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இ.ஜெயசேகரம் அவர்களின் ஏற்பாட்டில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (28.01.2026) காலை கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி நிலையத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 1000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 181 குடும்பங்களுக்கு இன்று உதவிகள் வழங்கப்பட்டன. இதற்காக ரூபா ஒரு கோடியே 46 இலட்சத்து 24 ஆயிரத்து 400 செலவிடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட உதவிகள் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளன.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சாள்ஸ் விஜயரட்ணம் ஜினோத், திட்ட ஏற்பாட்டாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இ.ஜெயசேகரம், மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள், கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படங்கள்:
- Details
- Category: News
2025 ஆம் ஆண்டிற்கான இறுதி நிதி அறிக்கையினை சமர்ப்பிப்பதில் சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் குறித்த நேரத்தில் அறிக்கையை அனுப்புதல், நிதி ஆவணங்களை சிறந்த முறையில் பேணுதல் போன்ற விடயங்களில் வினைத்திறனாக செயற்பட்டமைக்கான பாராட்டினை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது.b2025 ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் 24.01.2026 மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் நிதி நிர்வாகம் மற்றும் அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பான முக்கிய விடயங்கள் விவாதிக்கப்பட்டன. கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்களில் நிதி முகாமைத்துவத்தினை சிறப்பாக மேற்கொண்டமைக்காக உத்தியோகத்தர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார். கலந்துரையாடலின் நிறைவில் 2025 ஆம் ஆண்டிற்கான இறுதி நிதி அறிக்கையினை சமர்ப்பிப்பதில் சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் குறித்த நேரத்தில் அறிக்கையை அனுப்புதல், நிதி ஆவணங்களை சிறந்த முறையில் பேணுதல் போன்ற விடயங்களில் வினைத்திறனாக செயற்பட்டமைக்கான பாராட்டு சான்றிதழினை மாவட்ட அரசாங்க அதிபர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயளாளர் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கணக்காளர் ஆகியோரிடம் கையளித்து பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
படங்கள்:





