Gallery
- Details
- Category: Gallery
கிளிநொச்சி மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இணைய வெளிப் பாதுகாப்பு (Cyber Security) தொடர்பான செயலமர்வு
மாவட்ட செயலக தகவல் தொழிநுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பில் இலங்கை கணினி அவசர தயார் நிலை குழுவின் (Sri Lanak CERT) ஒழுங்குபடுத்தலில் இணைய வெளிப் பாதுகாப்பு (Cyber Security) தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு இன்று (06) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை கணினி அவசர தயார் நிலை குழுவின் இணைய பாதுகாப்பு பிரிவின் முகாமையாளர் திரு. திலின திசாநாயக்க , தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்களான திரு சஹீர் அகமது , திரு.முகமது அர்ஷாத் மற்றும் திரு. அவிஷ்க பண்டார ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர். இக் கருத்தரங்கில் இணைய பாதுகாப்பு தொடர்பான அறிமுகம் , இணைய வழி அச்சுறுத்தல்கள் (Cyber Threads) மற்றும் தாக்குதல்கள் (Cyber Attacks) , இணைய மோசடிகள் (Cyber Scams), இணைய வழி குற்றங்களும் (Cyber Crimes) அது தொடர்பான சட்ட ஏற்பாடுகளும், இணைய பாதுகாப்பு பொறிமுறைகள் (Cyber Security) போன்ற தலைப்புகளில் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.எஸ்.முரளிதரன் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களினை சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Clean Sri Lanka Program

First Day - 2025

GET TOGETHER - 2024

- Details
- Category: Gallery





