நிதி நிர்வாகம் மற்றும் 2025 ன் நிதி அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பான முக்கிய விடயங்களும் 2026 ம் நிதியாண்டுக்கான முன்னோடி விடயங்களும் இந்த நிகழ்வில் மிகவும் பயனுள்ளதாக விரிவாக ஆராயப்பட்டன. 2025 ஆம் ஆண்டிற்கான இறுதி நிதி அறிக்கையினை சமர்ப்பிப்பதில் சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் குறித்த நேரத்தில் அறிக்கையை அனுப்புதல், நிதி ஆவணங்களை சிறந்த முறையில் பேணுதல் போன்ற விடயங்களில் வினைத்திறனாக செயற்பட்டமை, செயற்பாட்டில் எதிர்நோக்கிய சவால்கள் குறித்தும் 2025ம் ஆண்டில் நிதிகையாளுகையில் ஒப்பீட்டளவில் சிறப்பான முன்னேற்றத்தினை அடைந்து கொண்டமைக்கு ஒத்துழைத்த விடயங்கள் குறித்தும் 2026 ம் ஆண்டில் உயர்ந்த செயற்பாட்டு பெறுபேற்றினை அடைந்துகொள்ளும் பொருட்டு கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்களில் நிதி முகாமைத்துவத்தில் 98% அடைவுமட்டத்தினை அடைந்து சிறப்பாக மேற்கொண்டமைக்காக உத்தியோகத்தர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார். நடைமுறை மற்றும் மூலதனச் செலவுகள் அனைத்தும் 98% அடைவினை மட்டத்திற்கு கொண்டு செல்லும் முறைமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள கடந்த ஆண்டுகளின் அனுபவங்களை அடிப்படைகளாக கொண்டு ஆலோசிக்கப்பட்டது. இதன்போது 2025ம் ஆண்டிற்கான பராட்டுதல்கள் இடம் பெற்றது. மேலும் 2026ன் நிதி அறிக்கைகள் வெளிப்படைதன்மையுடன், துல்லியமான காரணம்காட்டுதலுடன் கூடியவாறான, உரியகாலத்தில் சமர்பித்தலுக்கான மாதாந்தர கட்டுப்பாட்டு பதிவேடும் வெளியிடப்பட்டது.
மேலும் இந்த 2026ல் ஆண்டிலும் கிடைத்துள்ள ஒதுக்கீடுகளை சிறப்பான முறையில் முழுமையாக பயன்படுத்துவதற்கான அர்ப்பணிப்பான சேவையினை எதிர்பார்ப்பதாகவும் மக்களுக்கான அரச பணியில் தொடர்ந்தும் அனைவரது ஒத்துழைப்பினையும் மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டார்.
கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) பிரதம கணக்காளர், மாவட்ட உள்ளக கணக்காய்வாளர் திட்டமிடற் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச்செயலக பிரதேச செயலகங்களின் கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட செயலக நிதிக் கிளை மற்றும் திணைக்களங்களின் மாவட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

படங்கள்: