தெய்வீக கிராம நிகழ்வானது மலையாளயபுரம் வரசித்தி விநாயகர் ஆலயம் வளாகத்தில் நடைபெற்றது .
மலையாளபுரம் கிராமசேவையாளர் வசந்தரூபன் விஜிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக செல்வானந்தம் உதயபவன் (அதிபர்- கிளி/அன்னை சாரதா தேவி வித்தியாலயம்) வேலாயுதம்பிள்ளை மண்டலேஸ்வரன் (அதிபர் - கிளி/திருவள்ளுவர் வித்தியாலயம்) கலைமாமணி வல்லிபுரம் ஏழுமலைபிள்ளை நாகராசா றிசாந்தன் (வரசித்தி விநாயகர் ஆலய பரிபாலனசபைத் தலைவர் ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) உதவி மாவட்ட செயலாளர்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர்.நிர்வாக உத்தியோகத்தர், திணைக்கள உத்தியோகத்தர்கள்,பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தெய்வீக கிராமம் செயற்திட்டம் என்பது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், மதகுருமார்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியுடன் கிராமப்புறங்களில் உள்ள இந்து கோயில்கள் மற்றும் ஆன்மிக மையங்களை மையப்படுத்தி, அறநெறி கல்வி, சமூக அபிவிருத்தி, உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு சமூக மற்றும் சமய மேம்பாட்டுத் திட்டமாகும்.
இந்தத் திட்டம், கிராம மக்களின் ஆன்மிக மற்றும் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பாரம்பரிய கலாசாரத்தையும் நிலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமய மற்றும் அறநெறி மேம்பாடு,அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குப் புத்தகங்கள், உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல், கோயில்களில் சிறப்புப் பூசைகள், கோமாதா பூசை போன்றவற்றை நடத்துதல்.
சமூக நல உதவிகள்,வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல்.
பாரம்பரிய நிகழ்வுகள், கொடியேற்றம், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சைவப்புலவர் கூற்றுகள் போன்றவற்றை உள்ளடக்கியது.
தற்போதய சூழலில் போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக விரோத செயல்களிலிருந்து விடுவதற்கான வழியாக இது அமைகின்றது.