திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையாக  பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களது பங்குபற்றளோடு  24 -12-2018 இடம் பெற்றது

திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் கடும் பாதிப்புக்கள் ஏற்ப்பட்டுள்ளது இதன் விளைவுகள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முகமாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா எம் ஏ சுமந்திரன் சி சிவமோகன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா சாள்ஸ் நிர்மலநாதன் சி சிறிதரன் மற்றும் கிளிநொச்சி  மாவட்ட அரசங்க சு அருமைநாயகம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி, முல்லைத்தீவு   இராணுவம் போலீசார் மற்றும் திணைக்கள உயரதிகாரிகள் 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் இருப்பிடங்களுக்கான நஸ்டஈட்டினை வழங்கு தொடர்பாகவும் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு வேண்டிய தேவைப்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது...தொடர்ந்து இக்குழுவினர் பொதுமக்கள் தங்கியிருந்த முகாம்களைப் சென்று பார்வையிட்டனர்...

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளனது